TNPSC Thervupettagam

இந்தியாவின் EO செயற்கைக்கோள் திரள்

August 20 , 2025 17 hrs 0 min 25 0
  • இந்தியாவின் முதல் வணிக ரீதியான புவிக் கண்காணிப்பு (EO) செயற்கைக்கோள் திரளை உருவாக்குவதற்காக PixxelSpace india நிறுவனம் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தனியார் கூட்டமைப்பு ஆனது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12 மேம்பட்ட EO செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்காக 1,200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய உள்ளது.
  • இந்த செயற்கைக்கோள் திரள் ஆனது, பருவநிலைக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் ஆகியவற்றை ஆதரிக்கும்.
  • இந்த முன்னெடுப்பானது, இந்தியா வெளிநாட்டுத் தரவுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, பொது-தனியார் கூட்டாண்மையின் (PPP) கீழ் உள்நாட்டு விண்வெளித் துறையை மேம்படுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்