TNPSC Thervupettagam

இந்தியாவிற்கான தேசிய சுகாதாரக் கணக்கு மதிப்பீடுகள் (2019-20)

May 1 , 2023 827 days 405 0
  • இந்த ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.35 சதவீதத்தினைச் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அரசாங்கம் செலவிட்டுள்ளது.
  • இது 2014-15 ஆம் ஆண்டில் 1.13 சதவீதமாக இருந்தது.
  • அதே காலகட்டத்தில், பொது அரசு செலவினத்தில் (GGE) 3.94 சதவீதமாக இருந்த அரசின் சுகாதாரச் செலவினமானது 5.02 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • 2014-15 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், மொத்த சுகாதாரச் செலவினத்தில் (GGE) 29 சதவீதமாக இருந்த அரசின் சுகாதாரச் செலவினமானது 41.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் 1,108 ரூபாயாக இருந்த ஒரு நபருக்கான மருத்துவச் செலவானது 2019-20 ஆம் ஆண்டில் 2,014 ரூபாயாக இரட்டிப்பாகியுள்ளது.
  • இதே காலக்கட்டத்தில் 5.7 சதவீதமாக இருந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான செலவினமானது 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் சுகாதாரச் செலவினங்களில் 55.9 சதவீத அளவினை ஆரம்ப நிலை சுகாதாரப் பிரிவுகள் பெற்றுள்ளன.
  • இரண்டாம் நிலை சுகாதாரப் பிரிவுகள் 29.6 சதவீதமும், மூன்றாம் நிலை சுகாதாரப் பிரிவுகள் 6.4 சதவீதமும் அதில் பெற்றுள்ளன.
  • 2019-20 ஆம் ஆண்டில் மொத்த சுகாதாரச் செலவினங்களில் சொந்த செலவினங்களின் பங்கானது 47.1 சதவீதம் என்ற அளவில் நிலையான சரிவினைக் கண்டுள்ளது.
  • இது 2014-15 ஆம் ஆண்டில் 62.6 சதவீதமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்