TNPSC Thervupettagam

இந்தியாவிற்கான AI 2.0

July 28 , 2025 6 days 58 0
  • கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஆனது இந்தியாவிற்கான AI 2.0 திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது 2023 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று உலக இளையோர் திறன்கள் தினத்தில் தொடங்கப்பட்ட ஓர் இலவச இயங்கலை வழி செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சித் திட்டமாகும்.
  • இந்த திட்டமானது திறன் இந்தியா மற்றும் GUVI ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பு ஆகும்.
  • இந்தியாவிற்கான AI 2.0 ஆனது, குறிப்பாக கிராமப்புற இளைஞர்களுக்கு, அணுகலை மேம்படுத்துவதற்காக வேண்டி ஒன்பது இந்திய மொழிகளில் நிபுணத்துவம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சியை வழங்குகிறது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் நிறுவப்பட்ட புத்தொழில் நிறுவனமான GUVI, எண்ணிம வழி உள்ளடக்கத்தினை மேம்படுத்துவதற்காக வட்டார மொழிகளில் தொழில்நுட்பக் கற்றல் தளங்களை வழங்குகிறது.
  • நாடு முழுவதும் மிகவும் ஒரு அதிநவீனமான தொழில்நுட்பக் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம், எதிர்காலத்திற்கு ஏற்ற இந்தியாவின் இளையோர்களை (யுவ சக்தி) மேம்படுத்துவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்