TNPSC Thervupettagam

இந்தியாவின் மூன்று கின்னஸ் சாதனைகள்

December 8 , 2025 4 days 64 0
  • மத்திய சுகாதார அமைச்சகத்தின் தலைமையிலான ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான் (SNSPA) திட்டத்தின் கீழ் இந்தியா மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் பெற்றது.
  • ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான் என்பது ஆரோக்கியமான மற்றும் அதிகாரம் பெற்ற குடும்பங்களில் பெண்களின் ஆரோக்கியத்தினை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நாடு தழுவிய சுகாதார முன்னெடுப்பாகும்.
  • SNSPA ஆனது பெண்களின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • அதன் சாதனைகளில் பின்வருவன அடங்கும்,
    • ஒரு மாதத்தில் ஒரு சுகாதார தளத்தில் அதிகப் பதிவுகள் (3.21 கோடி),
    • ஒரு வாரத்தில் அதிக மார்பகப் புற்றுநோய் பரிசோதனைப் பதிவுகள் (9.94 லட்சம்), மற்றும்
    • மாநில அளவில் ஒரு வாரத்தில் மிக முக்கியமான அறிகுறிச் சோதனைகளுக்கான பதிவுகள் (1.25 லட்சம்).
  • போஷன் மா (ஊட்டச்சத்து மாதம்) அனுசரிப்பின் போது இந்தப் பிரச்சாரம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 02 ஆம் தேதி வரையில் நாடு தழுவிய அளவில் நடைபெற்றது.
  • இந்த இயக்கம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய், காசநோய், இரத்த சோகை மற்றும் பிற தடுப்பு சுகாதாரச் சோதனைகள் உட்பட இந்தியா முழுவதும் பெரிய அளவிலான சோதனைகளை செயல்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்