இந்தியாவில் அதிகரித்துவரும் தேவையற்ற கைபேசி அழைப்புகள்
December 22 , 2021 1335 days 595 0
இந்தியாவில் தேவையற்ற கைபேசி அழைப்புகளின் வீதமானது உலகத் தரவரிசையில் 9வது நிலையிலிருந்து 4வது இடத்திற்கு நகர்ந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் விற்பனை மற்றும் தொலைதொடர்பு மூலம் விளம்பரப் படுத்துதலுக்கான அழைப்புகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அழைக்கும் நபரின் அடையாளம் கண்டு அதில் தேவையற்ற அழைப்புகளைக் கண்டறிந்து அதைத் தடை செய்யும் நிறுவனமான Truecaller அளித்த சமீபத்திய தகவல்களில் இது கூறப்பட்டுள்ளது.
உலகளவில் அதிக எண்ணிக்கையில் தேவையற்ற அழைப்புகள் பெறப்படும் முதல் 3 நாடுகள் பிரேசில், பெரு மற்றும் உக்ரைன் ஆகியனவாகும்.