TNPSC Thervupettagam

இந்தியாவில் அயல்நாட்டு மாணாக்கர்களின் எண்ணிக்கை

June 19 , 2021 1434 days 543 0
  • 2019-20 ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள அயல்நாட்டு மாணாக்கர்களின் எண்ணிக்கையானது 50000 என்ற அளவினைத் தொட்டது.
  • கல்வி அமைச்சகத்தின் கணக்கெடுப்பின் படி, 2018-19 ஆம் அண்டில் 47,427 ஆகக் கணக்கிடப் பட்ட மொத்த அயல்நாட்டு மாணாக்கர்களின் எண்ணிக்கையை விட 2019-20 ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கையானது சற்று உயர்ந்து 49,348 ஆக உள்ளது.
  • 2,00,000 அயல்நாட்டு மாணாக்கர்கள் எனும் ஒரு இலக்குடன் அயல்நாட்டு மாணாக்கர்களை ஈர்க்கும் ஓர் இடமாகத் திகழ வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளை அடைவதிலிருந்து அது வெகுதொலைவில் உள்ளது என்பதை இது குறிக்கிறது.
  • இந்தியாவிலுள்ள அயல்நாட்டு மாணாக்கர்களில் அதிக அளவில் உள்ளவர்கள்  அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
    • நேபாளம் – 28.1%
    • ஆப்கானிஸ்தான் – 9.1%
    • வங்காள தேசம் – 4.6% மற்றும்
    • பூடான் – 3.8%
  • மாநிலங்கள் அளவில் கர்நாடகாவில் அதிகளவு அயல்நாட்டு மாணாக்கர்கள் (10,231) உள்ளனர்.
  • தமிழ்நாடு (4,461) 5வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்