TNPSC Thervupettagam

இந்தியாவில் இணையம் அறிக்கை 2022

May 9 , 2023 823 days 385 0
  • இந்த அறிக்கையின்படி, இந்திய மக்கள்தொகையில் 52% அல்லது 759 மில்லியன் மக்கள் 2022 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது இணைய வசதியினை அணுகுகிறார்கள்.
  • அவர்களில், 399 மில்லியன் பேர் கிராமப்புறங்களையும், 360 மில்லியன் பேர் நகர்ப் புறங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • 2022 ஆம் ஆண்டில் தோராயமாக 71% இணைய வசதி ஊடுருவலானது 6% வளர்ச்சியைக் கண்டது.
  • பீகார் (32%) மாநிலமானது, முன்னணி மாநிலமான கோவாவை விட (70%) இணைய வசதி ஊடுருவலின் அளவில் பாதி அளவினைக் கொண்டுள்ளது.
  • செயலில் உள்ள இணையப் பயனர்களில் 54% ஆண் பயனர்களாக உள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான அனைத்துப் புதியப் பயனர்களில் 57% பெண்கள் ஆவர்.
  • 2025 ஆம் ஆண்டிற்குள், பதிவு செய்யப்பட உள்ள புதியப் பயனர்களில் 65% பேர் பெண்களாக இருப்பார்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட எண்ணிமப் பண வழங்கீடானது, 2021 ஆம் ஆண்டினை விட 13% அதிகரித்து 338 மில்லியன் பயனர்களை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்