பால் மற்றும் சிறு தானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது என்ற நிலையில்பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் அரிசி ஊட்டச்சத்து செறிவூட்டல் திட்டம் (செறிவூட்டப்பட்ட அரிசியில், ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராட இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் B12 ஆகியவை சேர்க்கப்படும்) ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மத்திய திட்டங்களின் கீழ் நிறைவு செய்யப்பட்டது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 ஆனது, 78 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குகிறது.
இலவச உணவு தானியங்களை உறுதி செய்வதற்காக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா [PMGKAY] 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.