February 10 , 2022
1519 days
651
- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களை மறுவடிவமைப்பது குறித்த உலகளாவிய உச்சி மாநாட்டினைக் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்ய உள்ளது.
- இந்த மாநாடானது இது போன்ற முதல் வகையிலான உச்சி மாநாடு ஆகும்.
- இந்த உச்சி மாநாட்டினை மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார்.
- இது இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கான உச்சி மாநாடாகும்.
- இந்திய அருங்காட்சியகங்களை மேம்படுத்துவதற்கான புதிய நடைமுறைகள் மற்றும் உத்திகளை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
- ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
- இது இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு நிகழ்ச்சியாகும்.
- ப்ளூம்பெர்க் உடன் இணைந்து கலாச்சார அமைச்சகத்தினால் இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post Views:
651