TNPSC Thervupettagam

இந்தியாவில் உள்ள எதிரி நாட்டவர்களின் சொத்துகள்

March 12 , 2019 2304 days 688 0
  • எதிரி நாட்டவர்களின் சொத்துகளை பொதுப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • எதிரி நாட்டவர்களின் சொத்துகள் என்பது பிரிவினையின் போது பாகிஸ்தானிற்கு இடம் பெயர்ந்த மக்களின் சொத்துகளையும் 1962 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்திய-சீனப் போரின் போது சீனாவிற்கு இடம்பெயர்ந்த மக்களின் சொத்துகளையும் குறிக்கிறது.
  • எதிரி நாட்டவர் சொத்துகள் சட்டம் 1968 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. மேலும் இது எதிரி நாட்டவர்களின் சொத்துகளை ஒழுங்குமுறைப்படுத்தவும் மற்றும் பாதுகாப்பாளரின் அதிகாரங்களைப் பட்டியலிடவும் செய்கிறது.
 
  • இந்தியாவில் உள்ள அச்சொத்துகளின் மீது இடம்பெயர்ந்தவர்களின் வாரிசுகளுக்கு உரிமை இல்லாததை உறுதி செய்வதற்காக இச்சட்டம் 2017 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
  • பாகிஸ்தானைச் சேர்ந்த எதிரி நாட்டவர்களின் அதிக எண்ணிக்கையான சொத்துகள் உத்தரப் பிரதேசத்தில் உள்ளன.
  • சீன நாட்டின் குடியுரிமை பெற்ற மக்களின் அதிக எண்ணிக்கையிலான சொத்துகள் மேகாலயாவில் உள்ளன.
  • இதேபோன்று, ரூ.3000 கோடி மதிப்பிலான எதிரி நாட்டவர்களின் பங்குகள் இந்தியாவின் எதிரி நாட்டு சொத்துகளைப் பாதுகாக்கும் பாதுகாப்பாளரின் கண்காணிப்பில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்