TNPSC Thervupettagam

இந்தியாவில் உள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பு

April 25 , 2023 1087 days 909 0
  • ஜல் சக்தித் துறை அமைச்சகமானது, தனது முதலாவது நீர்நிலைகள் கணக்கெடுப்பு அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • இந்தக் கணக்கெடுப்பானது 2018-19 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டதோடு, இந்தியாவில் இது போன்ற ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இது இந்தியாவில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் மற்றும் நீர்த் தேக்கங்கள் பற்றியத் தகவல்களை வழங்குகின்ற நீர்நிலைகளின் தரவுத்தளமாகும்,
  • இந்தியாவில் குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் போன்ற 24.24 லட்சம் நீர்நிலைகள் உள்ளன.
  • இவற்றுள் 97.1% (23,55,055) நீர்நிலைகள் கிராமப்புறங்களிலும், வெறும் 2.9% (69,485) நீர் நிலைகள் நகர்ப்புறங்களிலும் உள்ளன.
  • மேற்கு வங்காள மாநிலத்தில் அதிக (7.47 லட்சம்) எண்ணிக்கையிலும், சிக்கிம் (134) மாநிலத்தில் குறைவான எண்ணிக்கையிலும் நீர்நிலைகள் உள்ளன.
  • மொத்த நீர்நிலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்கள் மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் அசாம் ஆகியனவாகும்.
  • நாட்டின் மொத்த நீர்நிலைகளில் அவை 63 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
  • நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களிலுள்ள மாநிலங்கள் மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகியனவாகும்.
  • கிராமப் புறங்களில் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களிலுள்ள மாநிலங்கள் மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் அசாம் ஆகியனவாகும்.
  • இதன் படி மொத்த நீர்நிலைகளில் 59.5 சதவீதம் குளங்களாகவும், அதைத் தொடர்ந்து கண்மாய்கள் (15.7 சதவீதம்), நீர்த்தேக்கங்கள் (12.1 சதவீதம்), நீர்ப் பாதுகாப்புக் கட்டமைப்புகள் /உட்கசிவு நீர்த்தேக்க அமைப்புகள்/தடுப்பணைகள் (9.3 சதவீதம்), ஏரிகள் (0.9 சதவீதம்) மற்றும் பிற ( 2.5 சதவீதம்) நீர்நிலைகளாகவும் உள்ளன.
  • இதில் 55.2 சதவீத நீர்நிலைகள் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்றும், 44.8 சதவீத நீர்நிலைகள் பொது உடைமையின் கீழ் (அரசுக் கட்டுப்பாட்டின் கீழ்) இருப்பதும் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்