இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றிய அறிக்கை 2022
March 22 , 2023 818 days 361 0
இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றிய 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கையைப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பாலின விகிதம் (1,000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள்) 2036 ஆம் ஆண்டிற்குள் 952 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2017-19 ஆம் ஆண்டில் 904 ஆக இருந்த குழந்தை பிறப்பின் போதான பாலின விகிதம் ஆனது 2018-20 ஆம் ஆண்டில் மூன்று புள்ளிகள் உயர்ந்து 907 ஆக உயர்ந்துள்ளது.
15 வயதுக்கு மேற்பட்டவர்களின் இந்தியாவின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஆனது 2017-2018 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருகிறது.
இது 2021-22 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு 77.2 ஆகவும், பெண்களுக்கு 32.8 ஆகவும் இருந்தது.
1971 ஆம் ஆண்டில் 2.2% ஆக இருந்த மக்கள்தொகை வளர்ச்சியானது 2021 ஆம் ஆண்டில் 1.1% ஆக குறைந்து சரிவினை எதிர்கொள்ளும் போக்கில் உள்ளது.
இது 2036 ஆம் ஆண்டில் மேலும் 0.58% ஆக குறையும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
2016 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 20-24 வயது மற்றும் 25-29 வயதுப் பிரிவினருக்கான வயது சார்ந்த கருவுறுதல் விகிதம் ஆனது முறையே 135.4 மற்றும் 166.0 என்ற அளவிலிருந்து 113.6 மற்றும் 139.6 ஆகக் குறைந்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் 32.7 ஆக இருந்த 35-39 வயதுப் பிரிவினருக்கான அதே குறி காட்டியானது 2020 ஆம் ஆண்டில் 35.6 ஆக அதிகரித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் 22.1 வயதாக இருந்த திருமணத்திற்கான சராசரி வயது ஆனது 2020 ஆம் ஆண்டில் 22.7 வயதாக சற்று உயர்ந்துள்ளது.
2036 ஆம் ஆண்டில், 15 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை குறையும் என்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.