இந்தியாவில் எரிவாயு மற்றும் இரசாயன கசிவு விபத்துக்கள்
December 30 , 2024 257 days 196 0
இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் எரிவாயு மற்றும் இரசாயன கசிவு மீதான கடும் விபத்துக்களின் எண்ணிக்கை இரு மடங்கினை விட மிக அதிகமாக உயர்ந்து 30 ஆக அதிகரித்துள்ளது.
இந்த 30 விபத்துகளில், குஜராத்தில் 2023 ஆம் ஆண்டில் 24 விபத்துகள் பதிவாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து வெறும் மூன்று விபத்துகளுடன் உத்தரப் பிரதேசம் மாநிலம் இடம் பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து அசாம் (2) மற்றும் கோவா (1) ஆகியவை இடம் பெற்றுள்ளன என்பதோடு, இதன் கடும் விளைவாக 25 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் 32 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் 13 விபத்துகளே பதிவான 2013 ஆம் ஆண்டினை விட இது குறிப்பிடத் தக்க அதிகரிப்பைக் காட்டுவதோடு, இதன் விளைவாக 11 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது மற்றும் ஒருவர் காயம் அடைந்துள்ளனர்.
பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆறு விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.