TNPSC Thervupettagam

இந்தியாவில் எல்பிஜி எரிவாயு

March 31 , 2020 1903 days 640 0
  • கோவிட் – 19 வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவிற்கு எல்பிஜி எரிவாயு தடை இல்லாமல் விநியோகிக்கப்படும் என்று சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது.
  • உலகில் எல்பிஜி எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடு இந்தியா ஆகும்.
  • கத்தார், சவுதி அரேபியா, ஓமன் மற்றும் குவைத் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து இந்தியா தனது எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்கின்றது.
  • 2018 – 19 ஆம் ஆண்டில், எல்பிஜியின் பயன்பாடானது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 6.9% அதிகரித்துள்ளது.
  • இதன் இறக்குமதியானது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் பொழுது 15.9% என்ற அளவில் அதிகரித்துள்ளது.
  • 2018 – 19 ஆம் ஆண்டில் இந்தியா 24.9 மில்லியன் டன் அளவுள்ள எல்பிஜியை (LPG/Liquid Petroleum Gas – நீர்த்த பெட்ரோலிய வளிமம்) நுகர்ந்துள்ளது.
  • உஜ்வாலா திட்டத்தின் அறிமுகத்திற்குப் பின்பு இதன் நுகர்வு மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்