TNPSC Thervupettagam

இந்தியாவில் எழுத்தறிவு விகிதம்

March 25 , 2023 880 days 4310 0
  • உலக வங்கி-இந்தியா அறிக்கையின்படி, இந்தியா சுதந்திரம் அடைந்த போது, ஒன்பது சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்த நிலையில், 11 பெண்களில் ஒரு பெண் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தார்கள்.
  • தற்போது, பெண்களின் கல்வியறிவு விகிதம் 77% ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவின் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 84.7% ஆக உள்ளது.
  • தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின் படி, நாட்டிலேயே 92.2% கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா திகழ்கிறது.
  • அதைத் தொடர்ந்து ஒன்றியப் பிரதேசமான லட்சத்தீவு (91.85%) உள்ளது.
  • நாட்டிலேயே அதிகளவு கல்வியறிவு பெற்ற மூன்றாவது மாநிலமாக மிசோரம் திகழ்கிறது (91.33%).
  • பீகார் 61.8% கல்வியறிவு விகிதத்துடன் இந்தியாவிலேயே குறைவான கல்வியறிவு பெற்ற மாநிலமாக உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் 65.3% மற்றும் ராஜஸ்தான் 66.1% ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • இருப்பினும், இந்தியாவில் சுமார் 12.6% மாணவர்கள் பள்ளிக் கல்வியிலிருந்து இடை நிற்கின்றனர்.
  • 19.8% பேர் இடைநிலைக் கல்வி நிலையில் தனது கல்வியினை இடை நிறுத்தியுள்ளனர்.
  • கல்வியறிவு விகிதமானது கிராமப்புற இந்தியாவில் 67.77% ஆகவும், நகர்ப்புற இந்தியாவில் 84.11% ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்