ஸ்காலர்ஸ் அட் ரிஸ்க் (Scholars at Risk) அமைப்பின் ஃப்ரீ டு திங்க் (Free to Think) 2026 அறிக்கையானது இந்தியாவின் கல்வி சுதந்திரம் தொடர்ந்து கடுமையாகக் கட்டுப்படுத்தப் பட்ட பிரிவிலேயே இருப்பதாகக் கூறியுள்ளது.
ஹாங்காங், இந்தோனேசியா, பாகிஸ்தான், மேற்குக் கரை மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட குழுவில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் கல்வி சுதந்திரக் குறியீடு (AFI) மதிப்பெண் 2015 ஆம் ஆண்டில் 0.41 ஆக இருந்ததிலிருந்து 2026 ஆம் ஆண்டில் 0.14 ஆகக் குறைந்துள்ளது.
கல்வி சுதந்திரக் குறியீடானது (AFI) வளாகத்தின் ஒருமைப்பாடு, கல்வி வெளிப்பாடு, ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் சுதந்திரம் மற்றும் நிறுவன சுயாட்சி போன்ற காரணிகளை அளவிடுகிறது.
இந்த அறிக்கையானது 2025 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 2026 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை 59 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 382 தாக்குதல்களைப் பதிவு செய்துள்ளது.
வன்முறை, சிறைவாசம் அல்லது கல்விப் பதவிகளை இழப்பது தொடர்பான 42 வழக்குகளுடன் இந்தியா அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்களைப் பதிவு செய்து ள்ளது.
கடந்த தசாப்தத்தில் 179 நாடுகளில் 50 நாடுகள் கல்வி சுதந்திரத்தில் கணிசமான சரிவைச் சந்தித்துள்ளன என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.