இந்தியாவில் காணப்படும் புவிவெப்ப ஆற்றல் வளங்கள் 2024
August 14 , 2024 340 days 356 0
இந்தியா தோராயமாக சுமார் 10,600 மெகாவாட் திறன் கொண்ட புவிவெப்ப ஆற்றல் வளங்களைக் கண்டறிந்துள்ளது.
இந்தியப் புவியியல் ஆய்வகமானது (GSI), ‘இந்தியாவின் புவிவெப்ப ஆற்றல் வளம் குறித்த வரைபடம், 2022’ என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவின் சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL) நிறுவனத்தினால் 20 கிலோவாட் திறன் கொண்ட புவிவெப்ப மின்னாற்றல் உற்பத்தி நிலையம் ஆனது சோதனை முறையில் தொடங்கப்பட்டது.
புவிவெப்ப ஆற்றல் என்பது புவியினுள் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படும் புதுப்பிக்கத் தக்க வெப்ப ஆற்றலாகும்.
பொதுவாக புவி வெப்பத் தொழில்நுட்பம் ஆனது இந்த ஆற்றல் அல்லது வெப்பத்தினை வெப்பம் ஆக்குவதற்கும் குளிரூட்டுவதற்கும் பயன்படுத்துவதற்காக என்று அதனை நேரடியாக பிரித்தெடுக்கிறது அல்லது அதனை மின்சாரமாக மாற்றுகிறது.