TNPSC Thervupettagam

இந்தியாவில் காவல்துறையின் நிலை அறிக்கை 2026

October 6 , 2026 5 days 94 0
  • இணையவழி குற்றத் தடுப்பு மற்றும் காவல் குறைதீர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 16 மாநிலங்களில் உள்ள 8,306 குடிமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் காவல்துறையின் நிலை அறிக்கை (SPIR) 2026 ஆனது வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையை லோக் நிதி-வளரும் சமூகங்கள் ஆய்வு மையம் (CSDS) மற்றும் காமன் காஸ் (Common Cause) ஆகியவை கூட்டாக வெளியிட்டன.
  • இணையவழி குற்ற வழக்குகள் 2023 ஆம் ஆண்டில் 86,420 ஆக இருந்ததில் இருந்து 2024 ஆம் ஆண்டில் 1,01,928 ஆக 17.9% அதிகரித்துள்ளது, அதே சமயம் ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் 6% குறைந்துள்ளன.
  • ஆய்வு செய்யப்பட்ட குடிமக்களில் சுமார் 13% பேர் கடந்த 2-3 ஆண்டுகளில் இணையக் குற்றங்களை எதிர்கொண்டுள்ளனர்; அவர்களில் 54% பேர் நிதி மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பாதிக்கப்பட்டவர்களில் 49% பேர் மட்டுமே முறையான காவல் புகாரைப் பதிவு செய்துள்ளனர், அதே சமயம் புகாரளித்தவர்களில் 27% பேர் காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்