இந்தியாவில் காவல்துறை அதிகாரிகள் - மக்கள் தொகை இடையேயான விகிதம்
April 10 , 2023 772 days 315 0
பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முறையே, இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 75.16 மற்றும் 97.66 என்ற விகிதத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்.
பீகாரின் காவல்துறை அதிகாரிகள் - மக்கள் தொகை விகிதம் 115.08 ஆகவும், மேற்கு வங்காளத்தில் அது 160.76 ஆகவும் உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, ஒட்டு மொத்த நாட்டிற்கான காவல்துறை அதிகாரிகள் - மக்கள் தொகை விகிதமானது தற்போதைய மொத்த எண்ணிக்கையின் படி ஒரு லட்சம் நபர்களுக்கு 152.80 ஆகும்.
ஆனால் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் எண்ணிக்கை 196.23 ஆகும்.
தமிழகத்தின் அனுமதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் எண்ணிக்கை என்பது 171.95 ஆக உள்ள நிலையில் தற்போதைய காவலர்களின் எண்ணிக்கை 154.25 ஆகும்.