TNPSC Thervupettagam

இந்தியாவில் கிளி போர்னா வைரஸ் 4 (PaBV-4)

July 12 , 2026 13 hrs 0 min 67 0
  • குவஹாத்தியில் உள்ள அசாம் கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்தியாவில் முதன்முறையாக கிளி போர்னா வைரஸ் 4 (PaBV-4)-ஐக் கண்டறிந்துள்ளனர்.
  • PaBV-4 என்பது ஆர்த்தோபோர்னாவைரஸ் ஆல்ஃபாப்சிட்டாசிஃபார்ம் (Orthobornavirus alphapsittaciforme) வகையைச் சேர்ந்த ஒரு பறவைகளைத் தாக்கும் வைரஸ் ஆகும் என்பதோடு இது கிளிகளில் புரோவென்ட்ரிகுலர் டைலேஷன் டிசீஸ் (PDD) என்ற ஒரு நோயை ஏற்படுத்துகிறது.
  • PDD நோயானது பறவைகளின் செரிமான மற்றும் நரம்பு மண்டலங்களைப் பாதித்து, விரைவான உயிரிழப்புக்கு வழிவகுக்கக்கூடும்.
  • கூண்டில் வளர்க்கப்படும் கிளி இனப் பறவைகளிடையே இந்த வைரஸ் கண்டறியப் பட்டுள்ளதுடன், இது பறவை வளர்ப்பு மற்றும் கிளி பாதுகாப்புக்கு அபாயங்களை ஏற்படுத்துகிறது.
  • இந்த ஆய்வில், அசாம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் முழுவதும் உள்ள 13 இனங்களைச் சேர்ந்த 83 பறவைகள் பரிசோதிக்கப்பட்டன என்ற நிலையில் அவற்றில் 44 பறவைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்