TNPSC Thervupettagam

இந்தியாவில் குற்றங்கள் விகிதம்

September 19 , 2021 1426 days 1047 0
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இதை வெளியிட்டது.
  • 19 பெருநகரங்களில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் குற்றங்களின் கீழ் அதிகமான  குற்ற அறிக்கையைப் பதிவு செய்த நகரங்கள் சூரத் (96.7%), கோயம்புத்தூர் (96.6%) மற்றும் அகமதாபாத் (96.3%) ஆகியனவாகும்.
  • நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அசாம் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக மிக அதிக குற்ற விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
  • ஒவ்வொரு 100,000 மக்கள்தொகைக்கும் எத்தனை குற்றங்கள் என்ற விகிதத்தில் இந்த எண்ணிக்கை கணக்கிடப் படுகிறது.
  • ஒடிசா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகியவை குற்றங்களில் அதிக உயர்வைக் கண்டு உள்ளன.
  • இதில் உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • பெருநகரப் பிரிவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசத்தின் லக்னோ முதலிடத்தில் உள்ளது.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குறைந்த எண்ணிக்கையோடு கோவை 1வது இடத்தையும், சென்னை 2வது இடத்தையும், கேரளாவின் கொச்சி 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
  • பாலியல் வன்புணர்வில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ள ராஜஸ்தானைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள்  உள்ளன.
  • 2020 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்றங்களிலும், அதிக எண்ணிக்கையிலான வழக்குகள்  "கணவர் அல்லது உறவினர்களால் கொடுமைப் படுத்தப்பட்ட" பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டன.
  • உத்தரப் பிரதேசம் (31) மற்றும் மத்தியப் பிரதேசம் (27) ஆகியவை வன்புணர்வு - கொலை/கூட்டு வன்புணர்வு என்ற பிரிவில் வழக்குகளைப் பதிவு செய்துள்ளன.
  • வரதட்சணை காரணமான இறப்புகளில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பட்டியலினச்  சாதியினருக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகமாக பதிவாகியுள்ளன.
  • நகரங்களில், கான்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அதிக விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.
  • கேரளா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பட்டியலினப் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்