தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) நாட்டின் குற்றப் போக்குகளை விளக்கும் “Crime in India 2024” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 58.86 லட்சம் புலன் விசாரணைக்கு உட்பட்ட குற்றங்கள் பதிவாகியுள்ளதுடன் 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 6% குறைவாகும்.
இணையவழி குற்றங்கள் 17.9% அதிகரித்துள்ளதுடன் 2023-ஆம் ஆண்டில் 86,420 ஆக இருந்த வழக்குகள் 2024-ஆம் ஆண்டில் 1,01,928 ஆக உயர்ந்துள்ளன.
நாட்டில் பதிவான மொத்த இணையவழி குற்றங்களில் 72.6% இணையவழி மோசடிகள் ஆகும்.
இந்த அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,70,746 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன என்பதோடு இதில் தினக்கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.
போதைப்பொருள் அதீதப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் 2024-ஆம் ஆண்டில் 50% அதிகரித்துள்ளன என்ற நிலையில் இதில் தமிழ்நாடு நாட்டின் மிக உயர்ந்த எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது.