இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் குறித்த யுனிசெஃப் அறிக்கை
October 1 , 2025 23 days 75 0
ஆந்திரப்பிரதேசத்தில் குழந்தை திருமணத்தின் பரவல் 33 சதவீதத்திலிருந்து (NFHS-4) 29.3% (NFHS-5) ஆகவும், இராஜஸ்தானில் 35.4 சதவீதத்திலிருந்து 25.4% ஆகவும் குறைந்து உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 12,400க்கும் மேற்பட்ட கிராமங்கள் குழந்தை திருமணம் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஒடிசா தனது "குழந்தைத் திருமண முறையில்லா கிராமம்" முன்னெடுப்பினை விரிவுபடுத்தியுள்ளது.
திட்டத்தில் முன்னேற்றம் இருந்த போதிலும், இந்தியாவில் ஆண்டுதோறும் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 1.5 மில்லியன் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்பதோடு மேலும் இங்கு 15 முதல் 19 வயதுடைய பெண்களில் 16% பேர் தற்போது திருமணமானவர்கள் ஆவர்.
யுனிசெஃப்–UNFPA உலகளாவியத் திட்டம் ஆனது கல்வி, சுகாதாரம், குழந்தைப் பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஆகியவற்றினை ஒருங்கிணைத்து மூலக் காரணங்களைப் பெருமளவில் நிவர்த்தி செய்கிறது.