இந்தியாவில் குழந்தைப்பருவ காசநோய்ப் பாதிப்புகள் 2024
April 17 , 2025 248 days 250 0
கடந்த ஐந்து ஆண்டுகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் அறிவிக்கப்பட்ட குழந்தைப் பருவ காசநோய் (TB) பாதிப்புகளின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்து உள்ளது.
2020 ஆம் ஆண்டில் 102,090 ஆக இருந்த பாதிப்புகள் ஆனது 2024 ஆம் ஆண்டில் 141,182 ஆக உயர்ந்துள்ளன.
உலக சுகாதார அமைப்பின் ஒரு கூற்றுப்படி, குழந்தைப்பருவ காசநோய் ஆனது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் காணப்படும் இந்த நோய்ப் பாதிப்பினை குறிக்கிறது.
இந்தியாவின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) ஆனது, இந்தியாவின் ஒட்டு மொத்த காசநோய் பாதிப்பில் சுமார் 10 முதல் 12 சதவீதம் வரையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
இந்த எண்ணிக்கையானது, ஆண்டிற்குச் சுமார் 300,000 முதல் 350,000 வரையிலானப் பாதிப்புகளுக்குச் சமமாகும்.