இந்தியாவில் 1992 ஆம் ஆண்டில் 59.6 ஆக இருந்த சராசரி வாழ்நாள் கால அளவானது 2019 ஆம் ஆண்டில் 70.8 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவானது அதிக சராசரி வாழ்நாள் கால அளவைக் கொண்டுள்ளது.
அம்மாநிலத்தில் சராசரி வாழ்நாள் கால அளவானது 77.3 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சராசரி வாழ்நாள் கால அளவு 66.9 ஆண்டுகளாகும்.
இந்தியாவில் இறப்புகளுக்கான முதல் ஐந்து காரணிகள் காற்று மாசுபாடு, உயர் இரத்த அழுத்தம், புகையிலையின் பயன்பாடு, மோசமான உணவு மற்றும் உயர் இரத்த சர்க்கரையாகும்.
சமீபத்தில் இது லான்செட் மருத்துவ அறிக்கையால் வெளியிடப் பட்டது.