TNPSC Thervupettagam

இந்தியாவில் சாலை விபத்துகள் அறிக்கை 2024

June 16 , 2026 13 hrs 0 min 47 0
  • நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் பொது சுகாதாரம் மற்றும் சமூகப் பொருளாதாரப் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகின்ற விதமாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஆனது 'இந்தியாவில் சாலை விபத்துகள் 2024' எனும் அறிக்கையை வெளியிட்டது.
  • சாலை விபத்து உயிரிழப்புகளில் அதிக வேகம் காரணமாக 70.3% உயிரிழப்புகளும், மோதிவிட்டு வாகனத்தை நிற்காமல் எடுத்துச் செல்வதால் (hit-and-run) 19.2% உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
  • ஹெல்மெட் மற்றும் இருக்கை வார்பட்டை அணியாததால் முறையே 54,000 மற்றும் 14,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
  • சுமார் 10.6 சதவீத விபத்துகளில் ஓட்டுநர்கள் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமலோ அல்லது வாகனப் பழகுநர் உரிமம் மட்டுமே வைத்திருந்தோ வாகனங்களை இயக்கியுள்ளனர்.
  • சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த பணமில்லா சிகிச்சைத் திட்டம் 2025, பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (BNCAP), eDAR (ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம்) மற்றும் ரா-வீர் திட்டம் போன்ற முன்னெடுப்புகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்