2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் 4,80,583 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன என்ற நிலையில் இதன் விளைவாக 1,72,890 பேர் உயிரிழந்தனர்.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் 68.1% அதிக வேகம் காரணமாக ஏற்பட்டது.
சாலை விபத்து காரணமான மொத்த உயிரிழப்புகளில் 44% இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தொடர்பானவையாகும்.
தலைக் கவசம் அணியாதது 2023 ஆம் ஆண்டில் 54,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.
2023 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் இருக்கைப் பட்டை/சீட் பெல்ட் அணியாதது 16,025 உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்தது.
சாலைகளில் உள்ள பள்ளங்களால் 5,840 விபத்துகளும் 2,161 உயிரிழப்புகளும் ஏற்பட்டன என்ற நிலையில் இது 2022 ஆம் ஆண்டை விட அதிக அதிகரிப்பைக் காட்டுகிறது.
சாலையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுதல் ஆனது சாலை விபத்துகளால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 5.5% விபத்திற்குக் காரணமாகும்.
உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 23,652 உயிரிழப்புகளும், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் மிகக் குறைவாக 24 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் உட்பட எளிதில் பாதிக்கப்படக் கூடிய சாலை பயனர்களின் எண்ணிக்கை மொத்த உயிரிழப்புகளில் 68% ஆகும்.
பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களின் எண்ணிக்கை மொத்த உயிரிழப்புகளில் 66.4% ஆகும்.