TNPSC Thervupettagam

இந்தியாவில் சாலை விபத்துகள் 2023

September 2 , 2025 22 days 87 0
  • 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் 480,583 சாலை விபத்துகள் பதிவாகின என்பதோடு இது முந்தைய ஆண்டை (2022) விட 4.2% அதிகரிப்பைக் காட்டுகிறது.
  • 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 18 முதல் 45 வயதுடைய இளைஞர்கள் 66.4% பேர் ஆவர்.
  • 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் பதிவானது என்பதோடு அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவாகின என்பதோடு அதிக உயிரிழப்பு எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • மொத்த சாலை வலையமைப்பில் தோராயமாக 5% பங்கினைக் கொண்டுள்ள நெடுஞ்சாலைகளில், 53 சதவீதத்திற்கும் அதிகமான விபத்துகள் மற்றும் 59 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகின்றன.
  • விபத்து காரணமான உயிரழப்புகளில் 45% பங்குடன் இரு சக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிக எண்ணிக்கை கொண்ட குழுவாக உள்ளது என்ற நிலைமையில் பாதசாரிகளின் எண்ணிக்கை இரண்டாவது அதிகபட்ச குழுவாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்