இந்தியாவில் சிறைச்சாலைப் புள்ளி விவரங்கள் அறிக்கை - 2021
September 18 , 2022 1022 days 415 0
தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகமானது (NCRB) சமீபத்திய அகில இந்தியச் சிறைச் சாலைப் புள்ளி விவரத்தினை வெளியிட்டது.
2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மொத்த சிறைச் சாலைகளில் 20.2 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் பங்கானது 2021 ஆம் ஆண்டில் 18.7% ஆகக் குறைந்துள்ளது.
அதே காலக்கட்டத்தில் 72.8% ஆக இருந்த இந்துக்களின் சதவீதம் 73.6% ஆக உயர்ந்து உள்ளது.
2020 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டின் சிறைச்சாலையில் உள்ளவர்களில் 3.4% ஆக இருந்த சீக்கியர்களின் சதவீதம் 4.2% ஆக அதிகரித்துள்ளது.
அந்தக் காலக்கட்டத்தில் 2.6% ஆக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையானது 2.5% ஆக குறைந்துள்ளது.
36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 19 சிறைகளில் சிறை வாசிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இந்த விகிதமானது உத்தரகாண்டில் அதிகபட்சமாக 185 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 100.2 சதவீதமாகவும் இருந்தது.
பெரும்பாலான கைதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்பதோடு அதில் 25.2 சதவீதம் பேர் படிப்பறிவில்லாதவர்கள் ஆவர்.
51.7 சதவீத ஒட்டு மொத்தக் குற்றவாளிகளில், 21.69 சதவீதம் பேர் பட்டியலிடப்பட்ட சாதியினரைச் சேர்ந்தவர்கள், 14.09 சதவீதம் பேர் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் 15.9 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர்.
வழக்கு விசாரணையில் உள்ள 49 சதவீத நபர்களில், 21.08 சதவீதம் பேர் பட்டியலிடப் பட்டச் சாதியினர், 9.88 சதவீதம் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் மற்றும் 18 சதவீதம் முஸ்லிம்கள் ஆவர்.
56.4 சதவீதக் கைதிகளில், முஸ்லிம்கள் 27.7 சதவீதம், பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் முறையே 23.05 மற்றும் 5.62 சதவீதம் ஆவர்.