TNPSC Thervupettagam

இந்தியாவில் சுகாதாரப் போக்குகள்

October 5 , 2026 11 hrs 0 min 29 0
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிறப்புக்கால வாழ்நாள் எதிர்பார்ப்பு 71 ஆண்டுகளை எட்டியுள்ளது, இது பாகிஸ்தானின் 68.2 ஆண்டுகளை விட அதிகம், ஆனால் வங்கதேசத்தின் 72.7 ஆண்டுகளை விடக் குறைவு.
  • இந்தியாவின் வாழ்நாள் எதிர்பார்ப்பு 2019 ஆம் ஆண்டில் 70.5 ஆண்டுகளில் இருந்து 2021 ஆம் ஆண்டில் 68.1 ஆண்டுகளாகக் குறைந்து, பின்னர் 2023 ஆம் ஆண்டில் 71 ஆண்டுகளாக மீண்டுள்ளது.
  • இந்தியாவின் ஆரோக்கியமான வாழ்நாள் எதிர்பார்ப்பு 2023 ஆம் ஆண்டில் 60.6 ஆண்டுகளாக இருந்தது, இது 2021 ஆம் ஆண்டில் 58.4 ஆண்டுகளாகவும், 2019 ஆம் ஆண்டில் 60.5 ஆண்டுகளாகவும் இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டில் 60 வயதில் உள்ள இந்தியர்கள் மேலும் 18.8 ஆண்டுகள் வாழ்வார்கள் என எதிர்பார்க்கலாம், இதில் 13.7 ஆரோக்கியமான ஆண்டுகளும் அடங்கும்.
  • இந்தியாவின் நோய் முறைமை மாறி வருவதுடன் 2000 ஆம் ஆண்டில் முதல் 10 இறப்புக்கான காரணங்களில் தொற்றும் நோய்கள் சுமார் 62 சதவீதமாக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் தொற்றா நோய்கள் (NCDs) சுமார் 75 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் இறப்புக்கான முக்கிய காரணங்களாக இஸ்கிமிக் இதய நோய் (ischaemic heart disease), நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (COPD), பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை உள்ளன. அதேவேளையில் காசநோய் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்கள் முதல் 10 காரணங்களுக்குள் தொடர்ந்து உள்ளன.
  • உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய சுகாதார மதிப்பீடுகள் 2000 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான வாழ்நாள் எதிர்பார்ப்பு, ஆரோக்கியமான வாழ்நாள் எதிர்பார்ப்பு, இறப்புக்கான காரணங்கள் மற்றும் நோய் சுமை ஆகியவற்றை உள்ளடக்கியது; 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய வாழ்நாள் எதிர்பார்ப்பு 73.3 ஆண்டுகளை எட்டியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்