இந்தியாவில் சூரியசக்தி உற்பத்தித் திறன் அதிகரித்து வரும் நிலையில், சூரியசக்தி தகடுகள் மற்றும் அதன் தயாரிப்புச் செயல்முறைகளிலிருந்து உருவாக்கப்படும் கழிவுகளைக் கையாளுவதற்கான தகுந்த கொள்கையானது இந்தியாவிடம் இல்லை.
இந்தியாவில் சூரியசக்தி கழிவுகளானது தேவையற்ற கழிவுகளாக விற்கப்படுகின்றன.
இவற்றைச் சரிவர மறுசுழற்சி செய்யாவிடில் இது சூரியசக்தி மின்கழிவுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
தமிழ்நாட்டிலுள்ள கும்மிடிப்பூண்டியில் சூரியசக்தி மின்கழிவுகளைச் சேகரித்து அதை மறுசுழற்சி செய்வதற்காக வேண்டி ஒரு தனியார் நிறுவனமானது நிறுவப்பட்டுள்ளது.