TNPSC Thervupettagam

இந்தியாவில் செம்பனை எண்ணெய் உற்பத்தி 2024

July 27 , 2025 18 days 38 0
  • சமீபத்தில், இந்தியாவானது மலேசியாவின் மிகப்பெரிய முளைவிட்ட செம்பனை விதைகளை இறக்குமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் இந்தியா மலேசியாவிலிருந்து 3.03 மில்லியன் டன் செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்தது.
  • இது மலேசியாவின் மொத்த செம்பனை எண்ணெய் ஏற்றுமதியில் 17.9% பங்கினைக் குறிக்கிறது.
  • இது இந்தியாவை மலேசிய செம்பனை எண்ணெய்க்கான ஒரு முதன்மையான சந்தையாக மாற்றுகிறது.
  • செம்பனை எண்ணெய் தற்போது உலகில் அதிகம் நுகரப்படும் தாவர எண்ணெய் ஆகும்.
  • உலகின் மிகப்பெரிய செம்பனை எண்ணெய் நுகர்வு நாடுகள் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை ஆகும்.
  • 2025-26 ஆம் ஆண்டிற்குள் செம்பனை சாகுபடியை 1 மில்லியன் ஹெக்டேராக விரைவாக விரிவுபடுத்த இந்தியா இலக்கு வைத்துள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில் இது 3.5 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
  • 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செம்பனை சாகுபடியின் கீழ் நடப்பு நிலப்பரப்புப் பயன்பாடு 3, 70,000 ஹெக்டேராக உள்ளது.
  • மேலும் தேசிய சமையல் எண்ணெய்கள் - செம்பனை திட்டத்தின் கீழ் 2029-30 ஆம் ஆண்டிற்குள் சுமார் 2.8 மில்லியன் டன் கச்சா செம்பனை எண்ணெய் உற்பத்தியை அடைய இந்தியா இலக்கு வைத்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் சிறப்பு கவனம் செலுத்தப்படும் பகுதிகள் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தீவுப் பகுதிகள் ஆகும்.
  • தற்போதைய மலேசியாவின் வணிக ரீதியான விதைகளின் முறையான வேளாண் நடைமுறைகள் மற்றும் போதுமான நீர்ப்பாசனத்துடன் இந்தியாவில் சாகுபடிக்கு ஏற்றவையாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்