TNPSC Thervupettagam

இந்தியாவில் சொத்துடைமை

December 23 , 2025 4 days 41 0
  • இந்தியாவின் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்கள் இரு சக்கர மோட்டார் வாகனங்கள், மகிழுந்துகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற நீண்ட காலம் உழைக்கும் பொருட்களை அதிகளவில் வாங்குகின்றன.
  • கைபேசிகள் தற்போது அனைத்து வீடுகளிலும் கிட்டத்தட்ட பொதுவானதாகி விட்டன.
  • கிராமப்புறங்களில், அடிமட்டத்தில் உள்ள 40% (B40) மக்களிடையே ஒரு தசாப்தத்திற்கு முன்பு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த மோட்டார் வாகனங்களின் உடைமை கிட்டத் தட்ட 50% ஆக உயர்ந்துள்ளது.
  • குளிர்சாதனப் பெட்டிகள், குறிப்பாக நகர்ப்புற B40 குடும்பங்களில் பொதுவானதாகி வருகின்றன, இருப்பினும் ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், அசாம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற சில மாநிலங்களில் கிராமப்புறச் சொத்து உடைமை குறைவாகவே உள்ளது.
  • உணவு அல்லாத பொருட்களுக்கானச் செலவினம் அதிகரித்துள்ளது அதே நேரத்தில் உணவுச் செலவினம் குறைந்துள்ளது.
  • அடிமட்ட 40% (B40) பேர் மற்றும் மேல்மட்ட நிலையில் உள்ள 20% (T20) மக்களிடையே குறிப்பாக நகர்ப்புறங்களில் உடைமை இடைவெளிகள் குறைந்துள்ளன.
  • வாகனங்களுக்கான அணுகல் ஆனது சிறப்பான சாலை இணைப்பு, சந்தை அணுகல் மற்றும் எளிதான நிதி விருப்பத் தேர்வுகள் மூலம் முன்னேற்றமடைந்துள்ளன.
  • நீண்ட காலம் உழைக்கும் பொருட்களின் உடைமை அதிகரிப்பது மேம்படுத்தப் பட்ட வாழ்க்கைத் தரங்கள், உற்பத்தித் திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றை நன்கு பிரதிபலிக்கிறது, மேலும் "சொத்துடைமை வறுமையை" இது குறைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்