இந்தியாவில் தங்க ஹால்மார்க்கிங்/முத்திரை விரிவாக்கம்
March 25 , 2026 93 days 156 0
இந்திய அரசு தங்க ஹால்மார்க்கிங்/முத்திரையை கட்டாயமாக்கும் உத்தரவின் ஆறாவது கட்டத்தில் மேலும் 7 மாவட்டங்களைச் சேர்த்து விரிவுபடுத்தியுள்ளது.
தங்க நகைகளில் தூய்மை, தரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தத் திட்டம் இந்திய தர நிர்ணய அமைப்பால் (BIS) செயல்படுத்தப் படுகிறது.
இது தங்கம் வர்த்தகத்தில் மோசடியைத் தடுக்கவும், கண்டறியும் திறனை மேம்படுத்தவும் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண்ணை (HUID) பயன்படுத்துகிறது.
இந்த அமைப்பு தற்போது 380 மாவட்டங்களை உள்ளடக்கியது என்பதோடுஇதில் 14K, 18K, 22K மற்றும் 24K ஆகிய தங்கத் தரங்கள் அடங்கும் என்பதோடுமேலும் 9K என்பது விருப்பத்தின் பேரில் கிடைக்கும் ஒரு தேர்வாகும்.