TNPSC Thervupettagam

இந்தியாவில் தடுப்பு மருந்துகளின் கையாளுகை

November 26 , 2020 1697 days 654 0
  • இந்தியாவின் சீரம் மையத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அடர் பூனவாலா அவர்கள் ஆக்ஸ்போர்டு கோவிட்-19 நோய்த் தடுப்பு மருந்தானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்துள்ளார்.
  • மேலும் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களும் புதிய  கொரானா வைரஸிற்கு எதிரான நோய்த் தடுப்பு மருந்தைப் பெறுவர்.   
  • ஆரம்பத்தில், ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனேகா நோய்த் தடுப்பு மருந்தானது பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய மூத்தக் குடிமக்கள் மற்றும் சுகாதார நலப் பணியாளர்கள் ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் கிடைக்கப் பெறும்.
  • தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் ஹைதராபாத் ஜிஎம்ஆர் சரக்கு விமான நிலையம் ஆகிய 2 விமான நிலையங்கள் நாடு முழுவதும் கோவிட் – 19 நோய்த் தடுப்பு மருந்து விநியோகத்தில் முக்கியப் பங்கினையாற்ற  இருக்கின்றன.
  • தேவையான வெப்பநிலைகளில் முக்கியமான சரக்கைக் கையாளுவதற்காக ஜிடிபி -எனும் சான்றளிக்கப்பட்ட, வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட வசதியுடன் கூடிய வகையிலான இந்தியாவின் முதலாவது மருத்துவ மண்டலம் ஜிஎம்ஆர் ஹைதராபாத் சரக்கு விமான நிலையமாகும்.
  • ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனமானது கோவிட் – 19 நோய்த் தடுப்பு மருந்தைக் கையாளுவதற்கு வேண்டி முழு அளவில் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்