இந்தியாவில் தயாரிப்போம் - 3 பாதுகாப்புத் துறைத் திட்டங்கள்
October 22 , 2019 2258 days 780 0
பாதுகாப்புக் கொள்முதல் ஆணையமானது (Defence Acquisition Council - DAC) இந்தியத் தொழில்துறையால் பாதுகாப்புத் துறை சார்ந்த பொருள்களை இந்தியாவிலேயே வடிவமைத்து, அவற்றை மேம்படுத்தி தயாரிப்பதற்காக மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
DAC ஆனது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கால் தலைமை தாங்கப் படுகின்றது.
இதன் மூலம், முதன்முறையாக பாதுகாப்புத் துறை அமைச்சகமானது சிக்கலான ராணுவ உபகரணங்களை இந்தியத் தனியார் துறையால் வடிவமைக்கவும் உருவாக்கவும் தயாரிக்கவும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.
இந்தத் திட்டங்கள் பின்வருமாறு
மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள் (Anti-Tank Guided Missiles - ATGM).
டி -72 மற்றும் டி -90 பீரங்கிகளுக்கான துணை மின் அலகுகள் (Auxiliary Power Units - APUs).
மலை மற்றும் அதிஉயர் நிலப் பரப்புக்கான தனித்த மின்னணுப் போர் (Electronic Warfare - EW) அமைப்புகள்.
ATGM ஆனது ஒரு தற்காப்புப் போரில் துருப்புக்களுக்கு ‘ஏவுகணை செலுத்தப்பட்ட பின்னர் அதைக் கட்டுப்படுத்த இயலாத திறன்’ மற்றும் “முன்னிலைத் தாக்குதல் திறன்” ஆகிய திறன்களை வழங்க இருக்கின்றது.
EW ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (Defence Research and Development Organisation - DRDO) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட இருக்கின்றது. இது இந்தியத் தொழில் துறையில் உள்ள வடிவமைப்பு மற்றும் உற்பத்திப் பங்குதாரரால் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றது.