TNPSC Thervupettagam

இந்தியாவில் தினசரி ஊதியம்

December 18 , 2022 888 days 473 0
  • கேரளாவில் பணி புரியும் தினசரி கூலிக் காரர்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் பணி புரியும் தங்கள் சக ஊழியர்களை விட அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளனர்.
  • அவர்கள் தேசியச் சராசரியான ரூ.373.30 என்ற அளவை விட இருமடங்கு (837.3) அதிகம் ஈட்டியுள்ளனர்.
  • கேரளாவில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் சராசரி தினசரி ஊதியமானது, குறைந்த ஊதியம் வழங்கப்படும் மாநிலங்களான திரிபுரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவற்றினை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
  • மற்ற இரண்டு முன்னணி மாநிலங்களாக ஜம்மு & காஷ்மீர் மற்றும் தமிழ்நாடு உள்ள நிலையில், அங்கு வழங்கப்படும் ஊதியம் முறையே ரூ.519 மற்றும் ரூ.478 ஆகும்.
  • ஒரு தொழிலாளிக்குச் சராசரியாக ரூ.726.8 ஊதியம் வழங்குவதுடன் அதிக ஊதியம் பெறும் வேளாண் தொழிலாளர்களைக் கொண்டு கேரள மாநிலம் முன்னணியில் உள்ளது.
  • பண்ணைத் தொழிலாளர்களுக்கு ஜம்மு & காஷ்மீரில் சராசரியாக ஒரு நபருக்கு ரூ. 524.6 ரூபாயும், இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு நபருக்கு ரூ. 457.6 ரூபாயும் தமிழ்நாட்டில் ஒரு நபருக்கு ரூ.445.6 ரூபாயும் சராசரி ஊதியமாக வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்