TNPSC Thervupettagam

இந்தியாவில் தொகுத்தல் உற்பத்தி - NSAM 2.0

October 14 , 2026 10 days 109 0
  • 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உத்தியின் அடிப்படையில், சேர்க்கை உற்பத்திக்கான தேசிய உத்தியின் (NSAM) 2.0 பதிப்பை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) 2026 ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகப் படுத்தியது.
  • சேர்க்கை உற்பத்தி (3D அச்சிடுதல்) என்பது டிஜிட்டல் 3D மாதிரிகளிலிருந்து அடுக்கடுக்காகப் பொருட்களை உருவாக்குகிறது, இது பல பாரம்பரிய உற்பத்தி முறைகளுடன் ஒப்பிடுகையில் பொருள் கழிவுகளைக் குறைக்கிறது.
  • உலகளாவிய சந்தையில் 5% பங்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பு, 50 தொழில்நுட்பங்கள், 100 புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் 500 தயாரிப்புகளை 2022 உத்தியானது இலக்காகக் கொண்டிருந்தது.
  • ஏழு தேசிய மையங்களில் 1.54 லட்சத்திற்கும் அதிகமானோர் பயிற்சி பெற்றுள்ளனர், 56 புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது மற்றும் 65 உள்நாட்டு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என இதன் முன்னேற்றம் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • NSAM 2.0 ஆனது உள்நாட்டு காப்புரிமைகள், உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) மலிவான பகிரப்பட்ட வசதிகள் மற்றும் 3D-அச்சிடப்பட்ட மின்னணுவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்