TNPSC Thervupettagam

இந்தியாவில் தொலைத்தொடர்பு பாதுகாப்பு

September 27 , 2026 4 days 57 0
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவின் செயலில் உள்ள வயர்லெஸ் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1,204.01 மில்லியனை எட்டியது, இது மொபைல் சாதனங்கள் மற்றும் சர்வதேச மொபைல் உபகரண அடையாள (IMEI) எண்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • IMEI என்பது தொலைத்தொடர்பு வலையமைப்பில் அலைபேசி சாதனத்தை அடையாளப் படுத்தும் 15 இலக்க தனித்துவ எண்ணாகும் என்பதோடு இதன் முதல் 8 இலக்கங்கள் வகை ஒதுக்கீட்டுக் குறியீட்டை (TAC) உருவாக்குகின்றன.
  • TAC ஒதுக்கீட்டை அலைபேசி தகவல் தொடர்புக்கான உலகளாவிய அமைப்புச் சங்கம் (GSMA) மேற்பார்வையிடுகிறது, அதே வேளையில் உற்பத்தியாளர்கள் சாதனங்களுக்கு தனித்துவமான IMEI எண்களை ஒதுக்குகிறார்கள்.
  • தொலைத்தொடர்புச் சட்டம் 2023-இன் கீழ் IMEI எண்ணை மாற்றுவது மற்றும் மோசடி அல்லது ஆள்மாறாட்டம் மூலம் சிம் கார்டுகளைப் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ₹50 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
  • சஞ்சார் சாதி (Sanchar Saathi) தளமானது சாதன விவரங்களைச் சரிபார்க்கவும் காணாமல் போன அல்லது திருடப்பட்ட அலைபேசிகளை முடக்கவும் பயனர்களுக்கு உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்