TNPSC Thervupettagam

இந்தியாவில் நியோடைமியம் உற்பத்தி

November 15 , 2025 13 hrs 0 min 20 0
  • இந்தியா, 2026 ஆம் நிதியாண்டில் 200 டன்னாக இருக்கும் அதன் நியோடைமியம் உற்பத்தியை 2027 ஆம் நிதியாண்டில் 500 டன்களாக உயர்த்த உள்ளது.
  • அணுசக்தித் துறையின் கீழ் உள்ள அரசுக்குச் சொந்தமான நிறுவனமான இந்திய அருமண் தனிமங்கள் லிமிடெட் (IREL) நிறுவனமானது, அருமண் தனிமக் கூறுகளை தோண்டியெடுத்து செயல்முறை செய்கிறது.
  • அருமண் உலோகங்கள் மின்சார வாகனங்கள், தூய்மையான எரிசக்தி தொழில் நுட்பங்கள், பாதுகாப்புத் துறை அமைப்புகள் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகின்றன.
  • IREL ஆனது, ஒடிசா மற்றும் கேரளாவில் தோண்டியெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு மையங்களை இயக்கி, பதினேழு அருமண் தனிமங்களில் எட்டு தனிமங்களை உற்பத்தி செய்கின்றன.
  • உலகளாவிய அருமண் சந்தையில் சுமார் 5 முதல் 6% வரையிலான பங்கினைக் கொண்டுள்ள இந்தியா, உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், இருப்புக்களில் ஆறாவது இடத்திலும் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்