TNPSC Thervupettagam

இந்தியாவில் நிலவும் தீவிர வறுமை பற்றிய உலக வங்கியின் அறிக்கை

April 20 , 2022 1202 days 604 0
  • உலக வங்கியின் ஒரு ஆய்வு அறிக்கையின்படி, 2011 ஆம் ஆண்டில் 22.5 சதவீதமாக இருந்த இந்தியாவின் தீவிர வறுமை நிலையானது 2019 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றிற்கு  முந்தைய நிலையில் 10.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • மேலும், இந்தியாவின் நகர்ப்புறங்களை விட  கிராமப்புறங்களில் வறுமை குறைவதன் வேகம் அதிகமாக உள்ளது.
  • 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில், வறுமை நிலைகள் முறையே 7.9 சதவீதம் மற்றும் 14.7 சதவீதம் குறைந்து உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில், வறுமை நிலை ஆனது கிராமப்புறங்களில் 11.6 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6.3 சதவீதமாகவும் இருந்தது.
  • பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட ஆண்டான 2016 ஆம் ஆண்டில் நகர்ப்புற வறுமை 2 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டில் கிராமப்புற வறுமை  10 புள்ளிகள் உயர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்