மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB) மற்றும் மாநில அரசுகள் ஆனது, 2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மாறி வரும் நிலத்தடி நீர் வளங்களை மதிப்பிட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு CGWB அறிக்கையின்படி, 102 மாவட்டங்களின் நிலத்தடி நீர் வளங்கள் அதிகமாகச் சுரண்டப்படுகின்றன என்ற நிலையில் அவற்றில் 22 அபாய நிலையில் உள்ளது மற்றும் 69 மாவட்டங்கள் ஓரளவு அபாய நிலையிலும் உள்ளன.
ஜல் சக்தி அமைச்சகம் ஆனது, 256 நீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களை இலக்காகக் கொண்டு, 2019 ஆம் ஆண்டில் ஜல் சக்தி அபியான் (JSA) திட்டத்தினைத் தொடங்கியது.
JSA Catch the Rain (CTR) பிரச்சாரம் ஆனது 2021 ஆம் ஆண்டில் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் மாவட்டங்களுடன் நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது.
2023 JSA CTR ஆனது, ஜல் ஜீவன் திட்டத்தினால் அடையாளம் காணப்பட்ட 150 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தது.
2024 ஆம் ஆண்டு பிரச்சாரம் ஆனது, நாரி சக்தி சே ஜல் சக்தி என்ற கருத்துருவின் கீழ் CGWB வாரியத்தினால் அடையாளம் காணப்பட்ட 151 மாவட்டங்களில் கவனம் செலுத்தியது.
2025 ஆம் ஆண்டு JSA CTR பிரச்சாரம், CGWB வாரியத்தினால் அடையாளம் காணப்பட்ட 148 மாவட்டங்களை இலக்காகக் கொண்டு, அடிமட்டப் பங்கேற்பு மற்றும் புதுமையான நிதியுதவிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
2025-2026 ஆம் ஆண்டு பிரச்சாரத்திற்காக 148 மிகவும் அதிக கவனம் செலுத்தப்படும் மாவட்டங்களுக்கு மொத்தம் 148 மத்தியத் தலைமை அதிகாரிகள் நியமிக்கப் பட்டு உள்ளனர்.