TNPSC Thervupettagam

இந்தியாவில் நீர் சேமிப்பு நெருக்கடி

October 3 , 2026 4 days 56 0
  • மத்திய நீர் ஆணையத்தின் (CWC) அறிக்கையின்படி, 178 முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் சேமிப்பு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 நிலவரப்படி அதன் மொத்தக் கொள்ளளவில் 70% ஆக குறைந்துள்ளது.
  • இந்த நீர் இருப்பு அளவானது 10 ஆண்டு சராசரியான 76.62% மற்றும் 2025 ஆம் ஆண்டின் அளவான 79% ஐ விடக் குறைவாகும்.
  • தென்னிந்தியாவில் (ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு) கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 87.25% ஆக இருந்த நீர் இருப்பு, தற்போது 50% மட்டுமே உள்ளது.
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகளின்படி, செப்டம்பர் 28 நிலவரப்படி தென்னிந்தியா இயல்பை விட 23% குறைவான மழையைப் பெற்றுள்ளது.
  • தெற்கு, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள 92 நீர்த்தேக்கங்களை உள்ளடக்கிய மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கையானது, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் வறட்சி அறிவிக்கப்பட்ட சமயத்தில் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்