TNPSC Thervupettagam

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகள்

July 31 , 2026 13 hrs 0 min 47 0
  • இந்திய ரிசர்வ் வங்கி, ₹10 மற்றும் ₹20 மதிப்புள்ள நோட்டுகளுக்கான ஒரு சோதனைத் திட்டத்துடன் தொடங்கி, பாலிமர் (நெகிழி) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டங்களை மீண்டும் செயல்படுத்தி வருகிறது.
  • ரிசர்வ் வங்கியானது இதற்கு முன்னர் ஐந்து நகரங்களில் (சென்னை, கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா) ஒரு பில்லியன் ₹10 பாலிமர் நோட்டுகளைச் சோதனை செய்தது.
  • ரிசர்வ் வங்கியின் முழு உரிமையுடைய துணை நிறுவனமான பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL), இரு அச்சில் நோக்குநிலை கொண்ட பாலிபுரோப்பிலீன் (BOPP) அடிப்படையிலான பாலிமர் மூலப்பொருளை வழங்குவதற்காக உலகளாவிய ஆர்வ வெளிப்பாட்டை (EOI) வெளியிட்டது.
  • பாரம்பரிய இந்திய நாணயம் 100% பருத்திக் கூழ் காகிதத்தால் ஆனது.
  • ஆஸ்திரேலியா 1988-ஆம் ஆண்டில் முழுமையான பாலிமர் ரூபாய் நோட்டுத் தொடரை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது.
  • பாலிமர் ரூபாய் நோட்டுகள் அதிக நீடித்து உழைக்கக்கூடியவை, நீர் புகாதவை, கிழியாதவை, மேலும் ஒளிபுகும் சாளரங்கள் மற்றும் உட்பொதிக்கப்பட்ட பாதுகாப்பு கூறுகள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இதில் கள்ளநோட்டு தயாரிப்பது கடினம்.
  • குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைப் பொறுத்தவரை, உற்பத்திச் செலவு மட்டுமே அதன் மதிப்பில் 20–24% ஆக இருந்தது என்று பல நாடுகள் கண்டறிந்துள்ளன.
  • இருப்பினும், நெகிழி நாணயங்களின் ஆதரவாளர்கள், குறைந்த மாற்று அதிர்வெண் மூலம் அதிக உற்பத்திச் செலவை நியாயப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம், நாணயம், நாணயச் சட்டம், சட்டப்பூர்வப் பணம் மற்றும் அந்நியச் செலாவணி ஆகியவற்றை ஒன்றியப் பட்டியலின் மூலம் ஒன்றிய அரசின் பிரத்தியேக சட்டமியற்றும் அதிகார வரம்பிற்குள் வைக்கிறது.
  • 1934 ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது.
  • தூய்மையான, நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காகவும், அழுக்கடைந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதற்காகவும், இந்திய ரிசர்வ் வங்கி 1999 ஆம் ஆண்டில் தூய்மையான நோட்டுக் கொள்கையை அறிவித்தது.
  • 2011 ஆம் ஆண்டின் நாணயச் சட்டம், இந்திய அரசால் வெளியிடப்படும் நாணயங்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் புழக்கத்தை நிர்வகிக்கிறது.
  • ஒரு ரூபாய் நோட்டை வெளியிடுவதற்கு இந்திய அரசு பொறுப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்