இந்தியாவில் புதிய ஆளுநர்கள்
September 13 , 2021
1407 days
758
- இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமிழ்நாடு, உத்தரகாண்ட் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்தார்.
- முன்னாள் நாகாலாந்து கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
- பஞ்சாப்பில் கூடுதல் ஆளுநர் பொறுப்பில் இருந்த தற்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப்பின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.
- நாகாலாந்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்போடு அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகி நியமிக்கப் படுகிறார்.
- உத்தரகாண்ட் ஆளுநராக குர்மித் சிங் நியமிக்கப்பட்டார்.
- உத்தரகாண்ட் ஆளுநர் பதவியிலிருந்து பேபி ராணி மவுரியாவின் ராஜினாமாவையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

Post Views:
758