TNPSC Thervupettagam

இந்தியாவில் புதிய சிவிங்கிப்புலிகளின் பரம்பரை

October 8 , 2026 3 days 68 0
  • இந்தியாவில் பிறந்த பெண் சிவிங்கிப்புலியான KJP21, மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது, இது இந்தியாவில் போட்ஸ்வானா பரம்பரையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • முகி மற்றும் KGP12-க்கு அடுத்தபடியாக குட்டிகளை ஈன்ற, இந்தியாவில் பிறந்த மூன்றாவது பெண் சிவிங்கிப்புலி KJP21 ஆகும்.
  • இந்தக் குட்டிகளின் தந்தை போட்ஸ்வானாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண் சிவிங்கிப் புலியாகும், இது இந்தியாவில் பிறந்த போட்ஸ்வானா பரம்பரையைச் சேர்ந்த முதல் சிவிங்கிப் புலிக் குட்டிகளாக அவற்றை மாற்றுகிறது.
  • இந்தியாவில் பிறந்த 41 சிவிங்கிப்புலிகள் உட்பட, இந்தியாவின் சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
  • சிவிங்கிப்புலிகள் திட்டத்தின் மரபணு அடித்தளத்தை வலுப்படுத்த 2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில் போட்ஸ்வானாவில் இருந்து ஒன்பது சிவிங்கிப்புலிகள் (6 பெண் மற்றும் 3 ஆண்) குனோ வந்தடைந்தன.
  • முன்னதாக, இந்தியா 2022 ஆம் ஆண்டில் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகளையும், 2023 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகளையும் கொண்டு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்