இந்தியா 2026 ஆம் ஆண்டில் தனது இணைவு ஆராய்ச்சித் தளத்தில் இரண்டு சிறிய அளவிலான கோளக டோகாமாக்குகளை (spherical tokamaks) சேர்த்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ப்ரானோஸ் ஃப்யூஷன் (Pranos Fusion) நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட 'பிரக்யா' 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று முடிக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று தொடங்கப்பட்டது.
காந்திநகரில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் (IPR) அதன் கச்சிதமான கோளக டோகாமாக்கில் முதல் பிளாஸ்மாவை அடைந்ததுடன் 114 பிளாஸ்மா வெளியேற்றங்களை நடத்தியது.
கோளக டோகாமாக் என்பது அணுக்கரு இணைவு ஆராய்ச்சிக்கான பிளாஸ்மா நடத்தையை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய காந்த-கட்டுப்பாட்டு சாதனமாகும்.
இந்தியாவின் இணைவு வசதிகளில் IPR-இல் உள்ள ADITYA-U மற்றும் SST-1 ஆகியவை அடங்கும், மேலும் பிரான்சில் உள்ள சர்வதேச வெப்ப அணுக்கரு பரிசோதனை உலை (ITER) திட்டத்தில் இந்தியா 9% பங்கைக் கொண்டுள்ளது.
பிரக்யா என்பது பிளாஸ்மா கட்டுப்பாடு மற்றும் உயர் வெப்பநிலை மீக்கடத்தி (HTS) காந்தங்களுக்கான ஒரு சோதனைத் தளமாகும் என்ற நிலையில் இது வணிக ரீதியான மின் உற்பத்தி இயந்திரம் அல்ல.