இந்தியாவில் புதிய தொழுநோய்ப் பாதிப்புகள் 2020-2021
February 3 , 2022 1418 days 626 0
2005 ஆம் ஆண்டில் இந்தியா "தொழுநோய் இல்லாதது" என்று அறிவிக்கப்பட்டாலும், உலகின் புதிய தொழுநோய்ப் பாதிப்பில் 60 சதவிகிதப் பங்கினை இந்தியா கொண்டு உள்ளது.
தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் தரவுகளின்படி, பீகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை புதிய தொழுநோய்ப் பாதிப்பில் 76 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 80 சதவீதப் பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.