இந்தியாவில் புதிய விலங்கு மற்றும் தாவர இனங்கள் கண்டுபிடிப்புகள் 2024
July 6 , 2025 15 hrs 0 min 24 0
இந்தியாவில் கடந்த ஆண்டு சுமார் 683 புதிய விலங்கு இனங்கள் கண்டறியப் பட்டது (459 புதிதாகக் கண்டறியப்பட்டன மற்றும் 224 புதிதாகப் பதிவு செய்யப்பட்டன).
மொத்தம் 433 புதிய தாவர இனங்கள் அடையாளம் காணப்பட்டன (இதில் 410 புதிதாகக் கண்டறியப் பட்டன மற்றும் 23 புதிதாகப் பதிவு செய்யப்பட்டன).
கேரளா 101 புதிய விலங்கு இனங்களுடன் (இதில் 80 புதிதாகக் கண்டறியப்பட்டன மற்றும் 21 புதிதாகப் பதிவு செய்யப்பட்டன) முன்னணியில் உள்ளது.
அதனை அடுத்து கர்நாடகா மாநிலம் 82 புதிய விலங்கு இனங்களுடன் (68 புதிதாகக் கண்டறியப்பட்டன மற்றும் 14 புதிதாகப் பதிவு செய்யப்பட்டன) இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு மாநிலத்தில் 63 புதிய விலங்கு இனங்கள் பதிவாகியுள்ளது (50 புதிதாகக் கண்டறியப்பட்டன மற்றும் 13 புதிதாகப் பதிவு செய்யப்பட்டன).
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் 72 புதிய விலங்கு இனங்கள் பதிவாகியுள்ளது (42 புதிதாகக் கண்டறியப்பட்டன மற்றும் 30 புதிதாகப் பதிவு செய்யப்பட்டன).
இதில் மேற்கு வங்காளத்தில் 56 புதிய விலங்கு இனங்கள் பதிவாகியுள்ளது (இதில் 25 புதிதாகக் கண்டறியப் பட்டன மற்றும் 31 புதிதாகப் பதிவு செய்யப்பட்டன).
இதில் மேகாலயாவில் 42 புதிய விலங்கு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன (இதில் 25 புதிதாகக் கண்டறியப்பட்டன மற்றும் 17 புதிதாகப் பதிவு செய்யப்பட்டன).
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 43 புதிய விலங்கு இனங்கள் (இதில் 14 புதிதாகக் கண்டறியப்பட்டன மற்றும் 29 புதிதாகப் பதிவு செய்யப்பட்டன) பதிவாகி உள்ளன.
முக்கியமான விலங்கு கண்டுபிடிப்புகளில் இரண்டு புதிய வகை ஊர்வன இனங்கள் மற்றும் 37 புதிய ஊர்வன இனங்கள், ஐந்து புதிய நீர் நில வாழ் இனங்கள் அடங்கும்.
கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான புதிய தாவர இனங்கள் (58) உள்ளன.
மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை முறையே 45 மற்றும் 40 புதிய தாவர இனங்களைக் கொண்டுள்ளன.
இப்புதிய தாவர இனங்களின் கண்டுபிடிப்புகளில் சுமார் 35 சதவீதம் ஆனது மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பதிவாகியுள்ளன.