இந்திய நாடானது சமீபத்தில் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனில் 100 GW என்ற மைல்கல்லை கடந்துள்ளது.
இந்தியா மொத்தம் 383.73GW அளவிலான நிறுவப்பட்ட ஆற்றல் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது.
இந்திய நாடானது 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, காற்றாற்றலில் 5வது இடத்திலும் சூரிய ஆற்றலில் 5 ஆம் இடத்திலும் மற்றும் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 4 ஆம் இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் உற்பத்தித் திறன் 41.09 GW ஆகும்.
இந்திய நாடானது உலகின் மிகப்பெரிய ஒரு தூய ஆற்றல் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது.
மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 450 GW அளவு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனைக் கட்டமைப்பது என்று தனது இலக்கினையும் உயர்த்தியுள்ளது.
இதில் மிகப்பெரிய நீர்மின் ஆற்றல் சேர்க்கப்பட்டால் இந்தியாவின் நிறுவப் பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனின் அளவு 146GW ஆக உயரும்
இது இந்தியாவின் மொத்த உற்பத்தித் திறனில் சுமார் 37% வரை பங்களிக்கிறது.
இந்தியாவின் சராசரி தனி நபர் கரிம உமிழ்வு உலக சராசரியில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.